அமரன் படத்தின் 'உயிரே' வீடியோ பாடல் வெளியானது
சென்னை,ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான படம் 'அமரன்'. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். தீபாவளி பண்டிகையில் வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.மறைந்த முன்னாள் ராணுவ வீரர் மேஜர் முகுந்தின் வாழ்க்கையைத் தழுவி இப்படம் உருவாகியுள்ளது. இதில் சிவகார்த்திகேயன் மேஜர் முகுந்தாகவும், முகுந்தின் மனைவி இந்துவாக சாய் பல்லவி நடித்துள்ளார். உலகளவில் சுமார் 900-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இப்படம் வெளியானது. இப்படத்தில் இடம்பெற்ற சண்டை மற்றும் காதல் காட்சிகள் ரசிகர்களைக் கவர்ந்துள்ளன. மேலும், ரசிகர்களிடம் கிடைத்த வரவேற்பால் இப்படம் உலகளவில் ரூ.300 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.அமரனில் முகுந்த் வரதராஜனாக நடித்து பெயர் பெற்ற சிவகார்த்திகேயனை சென்னை ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையம் சமீபத்தில் பாராட்டியது.இந்த படத்தின் 'ஹே மின்னலே' என்ற வீடியோ பாடல் சமீபத்தில் வெளியானது. இந்த பாடல் இதுவரை 2 கோடி பார்வைகளை கடந்து இணையத்தில் வைரலாகி வருகிறது.இந்த நிலையில் இப்படத்தின் 'உயிரே' வீடியோ பாடல் வெளியாகி உள்ளது. தற்போது இணையத்தில் இந்த பாடல் வைரலாகி வருகிறது.Through the morning rain, their Hearts march as one!#Uyirey Video Song from #Amaran Out Now! #Uyirey➡️ https://t.co/RZWT42eA4Z#UsureUsure ➡️ https://t.co/gcqDgHzzbe#MannReMannRe ➡️ https://t.co/rm1uFovNuS#Amaran5thweek #AmaranMajorSuccess #MajorMukundVaradarajan… pic.twitter.com/P6CoIuQwDn