'புஷ்பா 2' படத்தின் 'பீலிங்ஸ்' பாடல் புரோமோ வீடியோ வெளியீடு

  தினத்தந்தி
புஷ்பா 2 படத்தின் பீலிங்ஸ் பாடல் புரோமோ வீடியோ வெளியீடு

தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகராக இருந்துவருபவர் அல்லு அர்ஜுன். இவரது நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்த படம் 'புஷ்பா தி ரைஸ்'. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தற்போது இதன் இரண்டாம் பாகமாக 'புஷ்பா 2 தி ரூல்' படம் உருவாகி வருகிறது.'புஷ்பா 2 தி ரூல்' படத்தில் ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சமீபத்தில் படத்தின் டீசரும் அதனைத் தொடர்ந்து படத்தின் பாடல்களின் லிரிக் வீடியோவும் வெளியாகி வைரலாகின. 'புஷ்பா' படத்தில் 'ஊ சொல்றியா' என்ற பாடலுக்கு சமந்தா நடனமாடி இருந்தநிலையில், புஷ்பா -2 படத்தில் 'டான்சிங் குயின்' நடிகை ஸ்ரீலீலா நடனமாடியுள்ளார். இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இப்படம் அடுத்த மாதம் 5-ம் தேதி வெளியாக உள்ளது.இப்படத்தின் டிரெய்லர் தமிழ், தெலுங்கு, இந்தி, பெங்காலி, மலையாளம் மொழிகளில் வெளியான நிலையில், அல்லு அர்ஜுன் மற்றும் பகத் பாசிலுக்கு இடையேயான வசனங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலானது. படத்தின் முதல் பாடலான 'கிஸ்ஸிக்' பாடல் வெளியாகி மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இப்பாடல் தற்பொழுது யூடியூபில் 3 கோடி பார்வைகளை கடந்துள்ளது.இந்நிலையில் இப்படத்தின் பீலிங்ஸ் பாடலின் புரோமோ வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இப்பாடல் வரும் டிசம்பர் 1ம் தேதி வெளியாகிறது.The song promo you have all been waiting for is finally here #Peelings from December 1st ❤▶️ https://t.co/03tQNaggGR#Pushpa2TheRule GRAND RELEASE WORLDWIDE ON DECEMBER 5th.#Pushpa2TheRuleOnDec5thIcon Star @alluarjun @iamRashmika @aryasukku #FahadhFaasil @ThisIsDSP… pic.twitter.com/6VlrArqxVI

மூலக்கதை