சென்னை மாநிலக் கல்லூரியில் புதிய விடுதிகள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

  தினத்தந்தி
சென்னை மாநிலக் கல்லூரியில் புதிய விடுதிகள்: முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை, சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் ரூ.21.60 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள சிறப்பு மாணவர் மற்றும் மாணவியர் விடுதி கட்டிடங்களை முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இதன்படி 70 அறைகள் கொண்ட 200 மாணவ, மாணவிகள் தங்கும் புதிய விடுதிகளை அவர் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் அமைச்சர்கள் கோவி.செழியன், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, துணை முதல்-அமைச்சர் உதயநிதிஸ்டாலின் உள்ளிடோர் பங்கேற்றனர்.

மூலக்கதை