திருப்பதி: மத பிரசாரம் செய்ததாக பல்கலைக்கழக பேராசிரியருடன் இந்து அமைப்பினர் வாக்குவாதம் - கார் கண்ணாடி உடைப்பு

  தினத்தந்தி
திருப்பதி: மத பிரசாரம் செய்ததாக பல்கலைக்கழக பேராசிரியருடன் இந்து அமைப்பினர் வாக்குவாதம்  கார் கண்ணாடி உடைப்பு

திருப்பதி,திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தில் பொறியியல் துறை தலைவராகவும், பேராசிரியராகவும் பணியாற்றி வருபவர் செங்கையா. இவர் பல்கலைக்கழகத்தில் கிறிஸ்தவ மத பிரசாரம் செய்வதாக தகவல்கள் பரவின. மேலும் மாணவர்களை மிரட்டி செங்கையா மத பிரசாரத்தில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இது குறித்து இந்து மத அமைப்பை சேர்ந்த சிலர் பல்கலைக்கழக துணை வேந்தரிடம் புகார் அளித்துள்ளனர். ஆனால் துணைவேந்தர் பல்கலைக்கழத்தில் மத பிரச்சாரம் எதுவும் நடைபெறவில்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளார். இதையடுத்து இந்து மத அமைப்பினர் நேராக செங்கையாவின் அலுவலகத்திற்குள் நுழைந்து அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவரது மேஜையில் இருந்த மத புத்தகம் குறித்து கேள்வி எழுப்பிய அவர்கள், செங்கையாவை அலுவலகத்தில் இருந்து வெளியே இழுத்து வந்தனர். அவரது கார் கண்ணாடியையும் அவர்கள் உடைத்தனர். இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மூலக்கதை