ஜூனியர் ஆசிய கோப்பை: இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேற்றம்

  தினத்தந்தி
ஜூனியர் ஆசிய கோப்பை: இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேற்றம்

ஷார்ஜா,11-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் குருப் ஏ பிரிவில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா - ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் மோதின.இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது . அதில் டாஸ் வென்ற ஐக்கிய அரபு அமீரக அணியின் கேப்டன் ஆயன் கான் பேட்டிங்கை தேர்வு செய்தார் அதன்படி முதலில் ஆடிய ஐக்கிய அரபு அமீரகம் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது . இதனால் 44 ஓவரில் 137 ரன்களுக்கு ஐக்கிய அரபு அமீரகம் ஆல் அவுட்டானது. அந்த அணியின் ரேயான் கான் அதிகபட்சமாக 35 ரன்னும், அக்ஷத் ராய் 26 ரன்னும் எடுத்தனர்.இந்தியா சார்பில் யுதாஜித் குஹா 3 விக்கெட்டும், சேத்தன் சர்மா, ஹர்திக் ராஜ் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.இதையடுத்து, 138 என்ற எளிய இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 16.1 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 143 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் அரை சதம் கடந்தனர். ஆயுஷ் மாத்ரே 67 ரன்னும், வைபவ் சூர்யவன்ஷி 70 ரன்னும் எடுத்தனர்.இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியது.

மூலக்கதை