இஸ்ரேலுக்கு எதிரான தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு

  தினத்தந்தி
இஸ்ரேலுக்கு எதிரான தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு

நியூயார்க்,இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்தின் காசா நகரை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே ஓராண்டுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. காசா மீது குண்டு மழை பொழிந்து வரும் இஸ்ரேலின் தாக்குதலால் ஆயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்களும் கொல்லப்பட்டுள்ள்னர். பலர் தங்கள் வீடுகள் உடைமகளை இழந்து நிர்கதியாய் தவிக்கிறார்கள். ஹமாஸ் அமைப்பினரை ஒழித்துக் கட்டும் வரை போர் ஓயாது எனக் கூறியுள்ள இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனிடையே, பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும், இஸ்ரேலுக்கு எதிராகவும் ஐ.நா. பொதுசபையில் பல்வேறு தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதியிலிருந்து இஸ்ரேல் வெளியேற வேண்டும் என்பதை வலியுறுத்தும் தீர்மானம் ஒன்று நேற்று முன்தினம் ஐ.நா. பொதுசபையில் கொண்டுவரப்பட்டது. 'பாலஸ்தீன பிரச்சினைக்கு அமைதியான தீர்வு' என்ற பெயரிலான தீர்மானத்தை செனகல் நாடு முன்மொழிந்தது.விவாதத்துக்கு பின் தீர்மானம் ஓட்டெடுப்புக்கு விடப்பட்டது. அப்போது இந்தியா தீர்மானத்துக்கு ஆதரவாக தனது வாக்கை செலுத்தியது. இந்தியா தவிர்த்து மேலும் 156 நாடுகள் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தன. இஸ்ரேல், அர்ஜென்டினா, ஹங்கேரி உள்பட 8 நாடுகள் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்த நிலையில், உக்ரைன், கேமரூன் உள்ளிட்ட 7 நாடுகள் வாக்களிப்பை புறக்கணித்தன.

மூலக்கதை