ஜெயலலிதாவின் ஆட்சியை அமைக்கும் வல்லமை எடப்பாடி பழனிசாமிக்கு மட்டுமே உள்ளது - செல்லூர் ராஜு

  தினத்தந்தி
ஜெயலலிதாவின் ஆட்சியை அமைக்கும் வல்லமை எடப்பாடி பழனிசாமிக்கு மட்டுமே உள்ளது  செல்லூர் ராஜு

மதுரை,மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 8-ம் ஆண்டு நினைவு தினம் இன்று (5-ம் தேதி) அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள அ.தி.மு.க.வினர் ஜெயலலிதாவின் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிலையில் ஜெயலலிதா ஆட்சியை நாங்கள்தான் அமைப்போம் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மதுரையில் நடைபெற்ற ஜெயலலிதாவின் நினைவேந்தல் கூட்ட பேரணியில் பேசிய அவர், "யார் என்ன சொன்னாலும், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் ஆட்சியை மீண்டும் கொண்டுவரும் தகுதி, வல்லமை, திறமை கொண்ட ஒரே நபர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே. அவர் பின்னால்தான் 2 கோடி தொண்டர்கள் உள்ளனர். 2001ம் ஆண்டு மக்கள் மனநிலை தற்போது தமிழக அரசுக்கு எதிராக மாறி உள்ளது" என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

மூலக்கதை