ஜூனியர் ஆசிய ஆக்கி; சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து

  தினத்தந்தி
ஜூனியர் ஆசிய ஆக்கி; சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து

புதுடெல்லி,10 அணிகள் இடையிலான 10-வது ஜூனியர் ஆசிய கோப்பை ஆக்கி போட்டி (21 வயதுக்கு உட்பட்டோர்) ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடந்தது. இதில் அரையிறுதி ஆட்டங்களில் இந்திய அணி 3-1 என்ற கோல் கணக்கில் மலேசியாவையும், பாகிஸ்தான் அணி 4-2 என்ற கோல் கணக்கில் ஜப்பானையும் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறின.இந்தியாவும், பாகிஸ்தானும் இறுதிப்போட்டியில் நேற்று மோதின. தொடக்கம் முதலே விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 5-3 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.இந்த நிலையில் , சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார் இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,ஜூனியர் ஆசிய ஆக்கி சாம்பியன் பட்டத்தை வென்ற இந்திய அணிக்கு இது ஒரு வரலாற்று தருணம். அவர்களின் ஒப்பற்ற திறமை, மற்றும் நம்பமுடியாத குழுப்பணி ஆகியவை இந்த வெற்றியை விளையாட்டு பெருமையின் வரலாற்றில் பொறித்துள்ளன.இளம் சாம்பியன்களுக்கு வாழ்த்துகள் . அவர்களின் எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துகள். என தெரிவித்துள்ளார்.

மூலக்கதை