பெண்களின் மருத்துவ படிப்புக்கு தடை; ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஷீத்கான் கண்டனம்

  தினத்தந்தி
பெண்களின் மருத்துவ படிப்புக்கு தடை; ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஷீத்கான் கண்டனம்

காபூல்,ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சி நடை பெற்று வருகிறது. அங்கு பெண்கள் மருத்துவம் மற்றும் செவிலியர் உள்ளிட்ட மருத்துவ படிப்புகள் படிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர். இது தொடர்பாக எக்ஸ்தள பதிவில் கூறி இருப்பதாவது:-இஸ்லாமிய போதனைகளில் கல்வி மிக முக்கியமான இடத்தைப் பிடித்து உள்ளது. இது ஆண்களும் பெண்களும் அறிவைப் பெறுவதை வலியுறுத்துகிறது. இருபாலினர்களுக்கு இடையே இருக்கும் சமமான ஆன்மீக மதிப்பினை அங்கீகரிக்கிறது. ஆப்கானிஸ்தானில் சகோதரிகள் மற்றும் தாய்மார்களுக்கான கல்வி மற்றும் மருத்துவ நிறுவனங்கள் சமீபத்தில் மூடப்பட்டது. ஆழ்ந்த வருத்தமும் மிகுந்த ஏமாற்றமும் அளிக்கிறது.இந்த முடிவு அவர்களை மட்டுமல்ல, நமது சமூகத்தின் பரந்த கட்டமைபபையும் ஆழமாக பாதிக்கும். ஒவ்வொரு துறையிலும் வல்லுநர்கள் தேவை.குறிப்பாக மருத்துவத் துறையில் மிகவும் தேவை. பெண் மருத்துவர்கள் மற்றும் செலிலியர்களின் பற்றாக்குறை மிகவும் கவலைக்குரியது. இது பெண்களின் உடல்நலனை மிகவும் பாதிக்கும். எங்கள் சகோதரிகள் மற்றும் தாய்மார்களின் தேவைகளை சரியாக புரிந்துகொள்ளும் மருத்துவ நிபுணர்களால் வழங்கப்படும் மருத்துவம் மிகவும் அவசியமான ஒன்று இந்த முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என மனபூர்வமாக வேண்டுகோள் விடுகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.இதேபோல மற்றொரு ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரரான முகமது நபி 'பெண்கள் கல்வியை தொடர அனுமதிக்க வேண்டும்'. என்று வலியுறுத்தியுள்ளார். pic.twitter.com/rYtNtNaw14

மூலக்கதை