புதுச்சேரியில் புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய 8-ந்தேதி மத்திய குழு வருகை
புதுச்சேரி,பெஞ்சல் புயல் காரணமாக புதுச்சேரியில் கடந்த 30-ம் தேதி பெய்த அதி கனமழையால் ஏராளமான வீடுகளில் வெள்ளநீர் புகுந்தது. பயிர்கள் சேதமடைந்தன. கனமழையால் 4 பேர் உயிரிழந்தனர். பல இடங்களில் சாலைகள் சேதமடைந்தன. பெஞ்சல் புயல் காரணமாக புதுச்சேரியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு நிவாரண நிதியாக ரூ.600 கோடி வழங்க வேண்டும் என்று அம்மாநில முதல்-அமைச்சர் ரங்கசாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.இந்த நிலையில் பெஞ்சல் புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய குழு வருகிற 8-ந்தேதி புதுச்சேரி வருகிறது. மத்திய இணைச் செயலர் ராஜேஷ்குப்தா தலைமையில் வரும் இந்த மத்திய குழு 8, 9 ஆகிய தேதிகளில் ஆய்வு செய்து மத்திய அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்க திட்டமிட்டுள்ளது.