காட்பாடி-ஜோலார்பேட்டை பயணிகள் ரெயில் ரத்து - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
சென்னை,அரக்கோணம்-ஜோலார்பேட்டை வழித்தடத்தில் வளத்தூர்-மேல்பட்டி இடையே இன்று (6-ந்தேதி) காலை 10.55 மணி முதல் மதியம் 2.55 மணி வரை பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் 2 பயணிகள் ரெயில் (மெமு) ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-காட்பாடியில் இருந்து இன்று (6-ந்தேதி) காலை 9.30 மணிக்கு புறப்பட்டு ஜோலார்பேட்டை செல்லும் பயணிகள் ரெயிலும், மறுமார்க்கமாக, ஜோலார்பேட்டையில் இருந்து இன்று மதியம் 12.45 மணிக்கு புறப்பட்டு காட்பாடி வரும் பயணிகள் ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.