வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி நாளை உருவாகிறது

  தினத்தந்தி
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி நாளை உருவாகிறது

புதுடெல்லி,தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.இந்த நிலையில் வளிமண்டல சுழற்சி காரணமாக புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி நாளை உருவாக வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தியப் பெருங்கடல், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் நாளை காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது.இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக் கடலை அடையும் என்றும் 12-ம் தேதி வாக்கில் தமிழகம், இலங்கை கடற்கரையை நோக்கி நகரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை