புரோ கபடி லீக்: ஒரே நாளில் இரண்டு ஆட்டமும் டிரா
புனே,12 அணிகள் இடையிலான 11-வது புரோ கபடி லீக் போட்டி புனேவில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த 94-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் - யு மும்பா அணிகள் மோதின.திரில்லிங்கான இந்த ஆட்டத்தில் முதல் பாதியில் 4 புள்ளிகள் (8-12) பின்தங்கி இருந்த ஜெய்ப்பூர் அணி, அதன் பிறகு சரிவில் இருந்து மீண்டு இறுதியில் 22-22 என்ற புள்ளி கணக்கில் டிராவில் முடித்தது. மும்பை அணியில் சோம்பிர் 7 புள்ளிகளும், ஜெய்ப்பூர் தரப்பில் ரிசா மிர்பகேரி 6 புள்ளிகளும் எடுத்தனர்.முன்னதாக நடந்த தபாங் டெல்லி - உ.பி. யோத்தாஸ் அணிகள் இடையிலான ஆட்டமும் 32-32 என்ற புள்ளி கணக்கில் டிராவில் முடிந்தது. அதிகபட்சமாக உ.பி. வீரர் ககன் கவுடா 13 புள்ளிகள் திரட்டினார். நடப்பு தொடரில் இதுவரை 10 ஆட்டங்கள் டிராவில் முடிந்திருப்பது குறிப்பிடத்தக்கது.