யோகி பாபு நடித்த 'குழந்தைகள் முன்னேற்ற கழகம்' படத்தின் முதல் பாடல் வெளியீடு
சென்னை,நடிகர் யோகி பாபு தற்போது தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக மட்டுமல்லாமல் ஹீரோவாகவும் பல படங்களில் நடித்து வருகிறார். நெல்சன் இயக்கிய 'கோலமாவு கோகிலா' படத்தில் யோகி பாபுவின் நடிப்பு பட்டிதொட்டி எங்கும் பரவியது. மடோன் அஸ்வின் இயக்கத்தில் 'மண்டேலா' படத்தில் முதல் முறையாக கதாநாயகனாக அறிமுகமானார். அதன் பின்னர் 'போட், தி கோட், டீன்ஸ்' போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது விடாமுயற்சி, தி ராஜா சாப், பூமர் அங்கிள் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.இந்தநிலையில் யோகிபாபு 'குழந்தைகள் முன்னேற்ற கழகம்' என்ற படத்தில் நடித்துள்ளார். யோகி பாபுவுடன் செந்தில், அகல்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தை 'சகுனி' படத்தை இயக்கிய ஷங்கர் தயால் இயக்கி இருக்கிறார்.Best of luck team Happy to launch the First Single track from #KuzhanthaigalMunnetraKazhagam ▶️ https://t.co/OyjKWYBn2y#KMKMovie #Senthil @iYogiBabu @shankardayaln @Meenakshia96013 @Arunkumars414431 @ARichardkevin @subbu6panchu @Lizzieantony @iamakalya @nannanpk…இதற்கிடையில் தற்போது இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கள் வெளியாகி உள்ளது. படத்தின் முதல் பாடலான 'பாலிடிக்ஸ் தெர்லனா பூமரு' பாடலின் லிரிக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலை ஜிவி பிரகாஷ் குமார் அவரது எக்ஸ் தளத்தில் வெளியிட்டார். இப்பாடலை ஜிவி பிரகாஷ் குமார் பாடியுள்ளார். பாடலின் வரிகளை ஷங்கர் தயால் எழுதியுள்ளார். இது குறித்த பதிவை இயக்குனர் ஷங்கர் தயால் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.Celebration mode Thanks so much My dear GVP brother for your wishes and support https://t.co/3hsUQZlGvP pic.twitter.com/Bh2zPNpVpJ