சசிகுமார் நடிக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் பெயர் டீசர் வெளியீடு

  தினத்தந்தி
சசிகுமார் நடிக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் பெயர் டீசர் வெளியீடு

சென்னை,சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சசிகுமார். அதற்குப்பின் 'ஈசன்' படத்தை இயக்கிய சசிகுமார் அதன்பின் நடிப்பதில் கவனம் செலுத்தினார். இறுதியாக வெளியான 'அயோத்தி' 'கருடன்' ஆகிய திரைப்படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்தன. சசி குமார் நடிப்பில் உருவாகியுள்ள 'நந்தன்' திரைப்படம் நீண்ட இடைவெளிக்கு பிறகு திரையரங்குகளில் வெளியானது. சசிகுமார் இதுவரை நாம் பார்த்திராத தோற்றத்தில் இப்படத்தில் நடித்துள்ளார். இவருடன் ஸ்ருதி பெரியசாமி, சமுத்திரக்கனி, பாலாஜி சக்திவேல் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். அயோத்தி திரைப்படக் கூட்டணி, 'நந்தன்' படத்திலும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கிராம பஞ்சாயத்து தேர்தல் மூலம் ஏற்படும் சாதியக் கொடுமைகள் பற்றி நந்தன் திரைப்படம் அழுத்தமாக பேசியுள்ளதாக படம் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.குட் நைட் படத்தினை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் 5வது படமாக உருவாகும் இந்தப் படத்தினை அபிஷன் ஜீவிந்த் இயக்குகிறார். இந்தப் படத்தில் சசிகுமாருடன் நடிகை சிம்ரன் நடிக்கிறார். இந்நிலையில் இந்தப் படத்தின் பெயர் டீசர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தற்போது வெளியிட்டுள்ளார். ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.நடிகர் சசிகுமார் - சிம்ரன் இணைந்து நடிக்கும் திரைப்படத்திற்கு 'டூரிஸ்ட் பேமலி' என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் பெயர் டீசர் தற்போது இணையத்தில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. டீசரில் சசிகுமார் - சிம்ரனின் இலங்கை தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. படம் அடுத்த வருடம் திரைக்கு வருகிறது.My next #TouristFamilyThis Family will make u Love & Laugh with their quirksHappy to work with @SimranbaggaOffc Welcome debut Dir @Abishanjeevinth @MillionOffl @RSeanRoldan https://t.co/gSTxwVB8Gb@MRP_ENTERTAIN @Foxy_here03 @MithunJS5 pic.twitter.com/2hqphiDd15சசிகுமார் தற்போது இயக்குநர் ராஜு முருகன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் இயக்கத்தில் 'பிரீடம்' படத்தில் நடித்து வருகிறார்.

மூலக்கதை