'புஷ்பா 2' படத்தின் முதல் நாள் அதிகாரபூர்வ வசூல் வெளியீடு

  தினத்தந்தி
புஷ்பா 2 படத்தின் முதல் நாள் அதிகாரபூர்வ வசூல் வெளியீடு

சென்னை,இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான படம் 'புஷ்பா'. இந்த படம் பான் இந்தியா அளவில் பலத்தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது. இப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் 'புஷ்பா 2' நேற்று வெளியானது. இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். பின்னணி இசையை சாம் சி.எஸ். உருவாக்கி இருக்கிறார். மேலும் மைம் கோபி, பிரகாஷ் ராஜ், பிரியாமணி, அஜய் கோஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து இருந்த இப்படம் செம்மரக்கடத்தலை மையமாக வைத்து வெளியாகி உள்ளது. மேலும் இப்படத்தில் 'டான்சிங் குயின்' நடிகை ஸ்ரீலீலா நடனமாடியுள்ளார். புஷ்பா படத்தின் முதல் பாகம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற நிலையில், இரண்டாம் பாகத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது.இப்படத்தின் டிக்கெட் முன்பதிவு வசூல் மட்டுமே ரூ.100 கோடியை கடந்துள்ளதாக கூறப்படும் நிலையில், புஷ்பா 2 திரைப்படம் உலகளவில் வெளியானது. இப்படத்தை பார்த்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் படம் குறித்து நேர்மறையான விமர்சனங்களை குவித்து வருகின்றனர். இந்நிலையில் 'புஷ்பா 2' திரைப்படம் வெளியான முதல் நாளில் உலகளவில் ரூ.294 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.THE BIGGEST INDIAN FILM creates HISTORY at the box office ❤️#Pushpa2TheRule grosses 294 CRORES worldwide on Day 1 making it THE HIGHEST OPENING DAY in Indian Cinema #Pushpa2BiggestIndianOpenerRULING IN CINEMAS Book your tickets now!️ https://t.co/eJusnmNS6Y… pic.twitter.com/g8Aro35JgZ

மூலக்கதை