உ.பி.: பல்வேறு சாலை விபத்துகளில் 26 பேர் பலி

  தினத்தந்தி
உ.பி.: பல்வேறு சாலை விபத்துகளில் 26 பேர் பலி

கன்னோஜ்,உத்தர பிரதேசத்தில் ஏற்பட்ட பல்வேறு சாலை விபத்துகளில் சிக்கி 26 பேர் வரை பலியாகி உள்ளனர். இதில் பிலிபித் மாவட்டத்தில், திருமண வீட்டாரை ஏற்றி கொண்டு சென்ற கார் ஒன்று மரத்தின் மீது மோதி, பல அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். சித்ரகூட் மாவட்டத்தில், சொகுசு கார் ஒன்று லாரி மீது நேருக்கு நேராக மோதி கொண்டதில் 6 பேர் உயிரிழந்தனர்.கன்னோஜ் மாவட்டத்தில் தனியார் பஸ் ஒன்று, தண்ணீர் லாரி மீது மோதியது. ஆக்ரா-லக்னோ விரைவு சாலையில் நடந்த இந்த விபத்தில் 8 பயணிகள் பலியானார்கள். லக்னோவில் மால் காவல் நிலைய பகுதியில், மோட்டார் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 3 பேர் பலியானார்கள்.இதேபோன்று மஹோபா மாவட்டத்தில் சுகிரா கிராமத்தில் சாலை தடுப்பான் மீது கார் மோதியதில் குடாய் கிராம பகுதியை சேர்ந்த 3 பேர் பலியானார்கள்.

மூலக்கதை