மக்களின் தேவையறிந்து தி.மு.க. அரசு செயல்பட்டு வருகிறது - துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

  தினத்தந்தி
மக்களின் தேவையறிந்து தி.மு.க. அரசு செயல்பட்டு வருகிறது  துணை முதல்அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

வேலூர்,வேலூரில் ரூ.14.28 கோடியில் முடிவுற்ற 36 திட்டங்களை துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். பல்வேறு துறைகளின் சார்பில் ரூ.4,844 பேருக்கு ரூ.128.92 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார். மேலும், ரூ.75.95 கோடி மதிப்பிலான 17 புதிய திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார். பின்னர் உரையாற்றிய துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "மக்களின் தேவையறிந்து தி.மு.க. அரசு செயல்பட்டு வருகிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்" என்று கூறினார்.

மூலக்கதை