உத்தர பிரதேசம்: கன்னோஜ் பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி

  தினத்தந்தி
உத்தர பிரதேசம்: கன்னோஜ் பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி

புது டெல்லி , உத்தர பிரதேச மாநிலம் கன்னோஜ் மாவட்டத்தின் சக்ரவா பகுதியில் உள்ள ஆக்ரா-லக்னோ தேசிய நெடுஞ்சாலையில், செடிகளுக்கு நீர்பாசனம் செய்வதற்காக தண்ணீர் லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக வந்த லக்னோ-டெல்லி பேருந்து எதிர்பாராத விதமாக தண்ணிர் லாரி மீது மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது.இந்த விபத்தில் பேருந்தில் இருந்த 8 பயணிகள் உயிரிழந்தனர், மேலும் 19-பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.இந்நிலையில் உத்தர பிரதேச மாநிலம் கன்னோஜில் பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில்;உத்திர பிரதேச மாநிலம் கன்னோஜில் பேருந்து விபத்தில் 8 பயணிகள் வருத்தமளிக்கிறது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய உள்ளூர் நிர்வாகம் அவர்களுக்கு உதவும். உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் பிரதமரின் (PMNRF)தேசிய நிவாரன நிதியில் இருந்து ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கவும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.Saddened by the loss of lives in the bus accident in Kannauj, Uttar Pradesh. Condolences to those who lost their loved ones. May the injured recover soon. The local administration is assisting those affected.An ex-gratia of Rs. 2 lakh from PMNRF would be given to the next of… முன்னதாக கன்னோஜ் பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் உடனடியாக நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளதாகவும் விபத்தில் படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 வழங்க உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை