சென்னை - பெங்களூர் வந்தே பாரத் ரெயில் பயண நேரம் குறைப்பு
சென்னை,சென்னையில் இருந்து பெங்களூருக்கு இரண்டு வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. நாட்டின் மிக முக்கியமான வழித்தடங்ளில் ஒன்றாக சென்னை - பெங்களூர் இடையிலான வந்தே பாரத் ரெயிலின் பயண நேரத்தில் 25 நிமிடங்களை குறைத்து 4 மணி நேரமாக மாற்ற ரெயில்வே துறை திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் பெங்களூரு - சென்னை இடையே வந்தே பாரத்ரெயில் இயக்கப்படும் வேகம் அதிகரிக்கப்பட உள்ளது. இந்த நிலையில் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயிலின் பயண நேரத்தையும் குறைப்பதற்கு ரெயில்வே துறை திட்டமிட்டுள்ளது. தற்போது பெங்களூரில் இருந்து சென்னைக்கு சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயிலில் 5 மணி நேரங்களில் பயணம் செய்ய முடியும். அதில் 20 நிமிடங்களை குறைத்து 4 மணி நேரம் 40 நிமிடங்களாக மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.இதனிடையே பெங்களூர்-ஜோலார்பேட்டை இடையிலான பாதையில் பணி ரெயிலின் வேகம் தற்போது மணிக்கு 110 கிலோமீட்டர் என இயக்கப்படுகிறது. இதனை 130 கிலோ மீட்டர் என அதிகரிப்பதற்கான சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனை ஓட்டத்தின் போது வந்தே பாரத் ரெயில் மணிக்கு 183 கி.மீ. வேகத்தை எட்டியிருந்தாலும், வழித்தட கட்டுப்பாடுகள் காரணமாக வேகம் மணிக்கு 160 கி.மீ.ஆக குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.