'விடுதலை 2' பின்னணி இசைப் பணிகளை நிறைவு செய்த இளையராஜா
சென்னை,இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் 'விடுதலை'. இந்த படத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்க அவருடன் இணைந்து விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாவது பாகம் உருவாகியுள்ளது.இதில் சூரி, விஜய் சேதுபதி ஆகியோருடன் இணைந்து பிரகாஷ்ராஜ், சேத்தன், மூணார் ரமேஷ், பவானிஶ்ரீ, இளவரசு, பாலாஜி சக்திவேல், மஞ்சுவாரியர், கிஷோர், போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கும் இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், இப்படம் வருகிற டிசம்பர் மாதம் 20-ந் தேதி வெளியாக உள்ளது. சமீபத்தில் இப்படத்தின் இசை, டிரெய்லர் வெளியீடு விழா நடைபெற்றது.விழாவில் கலந்துகொண்ட படத்தின் இசையமைப்பாளர் இளையராஜா படம் குறித்து பாராட்டிப் பேசியுள்ளார். இப்படத்தின், 'தினம் தினமும்' என்ற முதல் பாடல் வெளியானது. இளையராஜா குரலில் வெளியான இந்த பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அதனை தொடர்ந்து 'பொறுத்தது போதும்' என்ற பாடல் வெளியானது. இந்நிலையில் இளையராஜா 'விடுதலை 2' படத்தின் பின்னணி இசைக்கான பணிகளை நிறைவு செய்துள்ளார். இதற்காக இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் ஆகியோர் இளையராஜாவை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்துள்ளனர். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.After the successful completion of the background score for Viduthalai Part 2, producer Elred Kumar and director Vetrimaaran met with music maestro Ilaiyaraaja at his studio. The team expressed their gratitude to the legendary composer for his exceptional contribution to the… pic.twitter.com/EKFhWbIaH9