ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் 2025: இந்திய வீரர் சுமித் நாகல் நேரடி தகுதி

  தினத்தந்தி
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் 2025: இந்திய வீரர் சுமித் நாகல் நேரடி தகுதி

புதுடெல்லி, ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 12-ந்தேதி முதல் 26-ந் தேதி வரை நடைபெற உள்ளது.இந்த தொடருக்கு நேரடியாக தகுதி பெற்றுள்ள வீரர்களின் பட்டியலை ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் கூட்டமைப்பு நேற்று வெளியிட்டது. இதில் ஆண்கள் தரவரிசையில் 98-வது இடத்தில் உள்ள இந்திய வீரர் சுமித் நாகல் நேரடியாக தகுதிபெற்றுள்ளார்.இவர் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் பங்கேற்பது இது 5-வது முறையாகும்.

மூலக்கதை