'சூது கவ்வும் 2' படத்திற்கு 'யு/ஏ' சான்றிதழ் வழங்கிய தணிக்கை குழு
சென்னை,கடந்த 2013-ம் ஆண்டு நலன் குமாரசாமி இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான திரைப்படம் 'சூது கவ்வும்'. இந்த படத்தில் சஞ்சிதா ஷெட்டி, அசோக் செல்வன், பாபி சிம்ஹா, ரமேஷ் திலக், கருணாகரன் என பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். டார்க் காமெடி பாணியில் உருவான இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சூது கவ்வும் படத்தின் அடுத்த பாகம் உருவாகிறது. இந்த படத்திற்கு 'சூது கவ்வும் 2 – நாடும் நாட்டு மக்களும்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை இயக்குனர் எம்.எஸ்.அர்ஜுன் இயக்கியுள்ளார். இதில் விஜய்சேதுபதிக்கு பதிலாக நடிகர் 'மிர்ச்சி சிவா' நடித்துள்ளார். இவருடன் இணைந்து ராதாரவி, ரமேஷ் திலக், கருணாகரன், எம் எஸ் பாஸ்கர் ஆகிய பலரும் நடித்திருக்கின்றனர். இந்த படத்தை தங்கம் சினிமாஸ் சார்பில் எஸ் தியாகராஜன் மற்றும் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் சார்பில் சி.வி.குமார் இணைந்து தயாரிக்கின்றனர்.இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், பாடல் மற்றும் டிரெய்லர் வெளியாகி கவனம் பெற்றது. இத்திரைப்படம் வருகிற 13-ந் தேதி வெளியாக உள்ளது. இப்படம் வெளியாக இன்னும் 6 நாட்கள் உள்ள நிலையில், தற்போது இந்தபடத்திற்கு தணிக்கை குழு 'யு/ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளது. இந்த படம் முதல் பாகத்தை போல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.The Censor Board certified the GANG UA - 13+ to chase in Cinemas from Dec 13 ICYM #SoodhuKavvum2Trailer https://t.co/u4SYYBN0sc #SoodhuKavvum2: நாடும் நாட்டு மக்களும் #SoodhuKavvum2FromDec13@ThirukumaranEnt @icvkumar @thangamcinemas @cinemas56492 @actorshiva pic.twitter.com/rNixpSiMAK