ரஷியா மீது உக்ரைன் நடத்திய தாக்குதலில் 5 பேர் பலி
மாஸ்கோ,உக்ரைன்-ரஷியா இடையிலான போர் சுமார் 2 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. இதில் உக்ரைன் மீதான தாக்குதலை ரஷிய ராணுவம் தீவிரப்படுத்தி வரும் நிலையில், மேற்கத்திய நாடுகளின் ஆயுத மற்றும் பொருளாதார உதவியுடன் ரஷியாவின் தாக்குதல்களை உக்ரைன் ராணுவம் எதிர்கொண்டு போரிட்டு வருகிறது.இந்நிலையில், ரஷியாவின் ரில்ஸ்க் நகரில் நேற்று உக்ரைன் நடத்திய தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர் மற்றும் 12 பேர் காயமடைந்தனர் என்று குர்ஷ்க் மாகாணத்தின் பொறுப்பு கவர்னர் அலெக்சாண்டர் கின்ஷ்டைன் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குழந்தைகள் இறக்கவில்லை என கூறப்பட்டுள்ளது.முன்னதாக, இந்த தாக்குதலில் ஒரு குழந்தை உள்பட 6 பேர் கொல்லப்பட்டதாகவும், 10 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது புதுப்பிக்கப்பட்ட சரியான தரவுகள் வெளியாகியுள்ளது. அமெரிக்கா வழங்கிய ஏவுகணைகளை கொண்டு உக்ரைன் இந்த தாக்குதலை நடத்தியதாக ரஷியா குற்றஞ்சாட்டியுள்ளது.