நெல்லை: நான்கு வழிச்சாலையில் விபத்து - பைக்கில் சென்ற தொழிலாளி உயிரிழப்பு

  தினத்தந்தி
நெல்லை: நான்கு வழிச்சாலையில் விபத்து  பைக்கில் சென்ற தொழிலாளி உயிரிழப்பு

நெல்லை,நெல்லை மாவட்டம் தருவை அருகே உள்ள அடைமிதிப்பான்குளம் பகுதியை சேர்ந்தவர் ராஜசெல்வன். கூலித்தொழிலாளியான இவர் வேலை நிமித்தமாக நெல்லை மூன்றடைப்பு பகுதிக்கு சென்றுவிட்டு தனது பைக்கில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அங்குள்ள நான்கு வழிச்சாலையை அவர் கடக்க முயன்றபோது நாகர்கோவிலில் இருந்து நெல்லை நோக்கி வந்த கார் ஒன்று எதிர்பாராத விதமாக பைக் மீது மோதியது. இந்த விபத்தில் பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்ட ராஜசெல்வன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதோடு விபத்தில் சிக்கிய பைக், சிறிது நேரத்தில் தீப்பற்றி எரியத் தொடங்கியது. இந்த விபத்து காரணமாக நான்கு வழிச்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மூன்றடைப்பு போலீசார், உயிரிழந்த ராஜசெல்வனின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து கார் டிரைவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூலக்கதை