பாகிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல் - 16 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு

  தினத்தந்தி
பாகிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்  16 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு

இஸ்லாமாபாத்,வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள கைபர் பக்டுங்க்வா மாகாணத்தில் தெற்கு வாரிஸ்தான் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினரின் சோதனை சாவடி மீது இன்று பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் 16 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 8 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது கடந்த சில மாதங்களில் நடந்த மிகவும் மோசமான பயங்கரவாத தாக்குதல் என்று அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் இதே மாவட்டத்தில் உள்ள சராரோகா என்ற பகுதியில், பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை