பயிற்சியின்போது இந்திய வீரருக்கு கையில் காயம் - 4வது டெஸ்ட்டில் பங்கேற்பாரா?

  தினத்தந்தி
பயிற்சியின்போது இந்திய வீரருக்கு கையில் காயம்  4வது டெஸ்ட்டில் பங்கேற்பாரா?

மெல்பேர்ன்,ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அந்நாட்டு அணியுடன் 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.இதில் 3 போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில் 1-1 என்ற புள்ளிகள் கணக்கில் இரு அணிகளும் சமநிலையில் உள்ளன.இதனிடையே, இரு அணிகளுக்கும் இடையேயான 4வது டெஸ்ட் வரும் 26ம் தேதி மெல்போர்னில் நடைபெற உள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர் கேஎல் ராகுலுக்கு கையில் காயம் ஏற்பட்டுள்ளது. 4வது டெஸ்ட் போட்டிக்காக பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது கேஎல் ராகுலுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனால், 4வது டெஸ்ட்டில் கேஎல் ராகுல் பங்கேற்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.

மூலக்கதை