புரோ கபடி லீக்: அரையிறுதியில் அரியானா ஸ்டீலர்ஸ் - உ.பி. யோத்தாஸ் அணிகள் இன்று மோதல்

  தினத்தந்தி
புரோ கபடி லீக்: அரையிறுதியில் அரியானா ஸ்டீலர்ஸ்  உ.பி. யோத்தாஸ் அணிகள் இன்று மோதல்

புனே,11-வது புரோ கபடி லீக் போட்டி இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் பங்கேற்ற 12 அணிகள் தங்களுக்குள் தலா 2 முறை மோதின. லீக் சுற்று முடிவில் டாப்-2 இடங்களை பிடித்த அரியானா ஸ்டீலர்ஸ், முன்னாள் சாம்பியன் தபாங் டெல்லி அணிகள் நேரடியாக அரையிறுதிக்குள் நுழைந்தன. 3 முதல் 6-வது இடத்தை பெற்ற உ.பி. யோத்தாஸ், பாட்னா பைரட்ஸ், யு மும்பா, ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் ஆகிய அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெற்றன.இதில் நேற்று இரவு நடைபெற்ற வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியை வீழ்த்தி உ.பி. யோத்தாஸ் அணியும், யு மும்பா அணியை வீழ்த்தி பாட்னா பைரேட்ஸ் அணியும் அரையிறுதிக்கு முன்னேறின. இந்த நிலையில் இன்று நடைபெறும் அரையிறுதி ஆட்டங்களில் அரியானா ஸ்டீலர்ஸ் - உ.பி. யோத்தாஸ் (இரவு 8 மணி), தபாங் டெல்லி - பாட்னா பைரேட்ஸ் (இரவு 9 மணி) அணிகள் மோதுகின்றன.

மூலக்கதை