நாடளாவிய ரீதியில் ஆயுதப்படைக்கு அழைப்பு - ஜனாதிபதி அநுரவின் அதிரடி உத்தரவு - லங்காசிறி நியூஸ்
![நாடளாவிய ரீதியில் ஆயுதப்படைக்கு அழைப்பு ஜனாதிபதி அநுரவின் அதிரடி உத்தரவு லங்காசிறி நியூஸ்](https://cdn.ibcstack.com/article/fc7ec870-d199-48ad-8a17-58fda1d2942f/24-676e70799fffe.webp)
நாடளாவிய ரீதியில் அனைத்து நிர்வாக மாவட்டங்களிலும் பொது ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக ஆயுதப்படையினரை அழைக்குமாறு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க உத்தரவிட்டுள்ளார். இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை இராணுவம், இலங்கை கடற்படை மற்றும் இலங்கை விமானப்படையின் அனைத்து பாதுகாப்பு தரப்பினருக்கும் அழைப்பு விடுக்கும் உத்தரவு அடங்கிய அதி விசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி வெளியிட்டுள்ளார்.பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 12வது பிரிவின்படி ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கமைய, நாட்டின் அனைத்து நிர்வாக மாவட்டங்களிலும் அது தொடர்பான உள்ளுர் நிலைகளிலும் பொது ஒழுங்கைப் பேணுவதற்கு ஆயுதப்படைகள் அழைக்கப்பட்டுள்ளன.
மூலக்கதை
![](https://www.tamilmithran.com/img/apple_icon.png)