பெரம்பலூர்: திருடப்பட்ட 18 இருசக்கர வாகனங்கள் மீட்பு - 4 பேர் கொண்ட கும்பல் கைது
பெரம்பலூர்,பெரம்பலூர் மாவட்டம் குன்னம் மங்களமேடு காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் திருடப்படும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வந்தன. இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் போலீசாரிடம் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு, இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்த 4 பேர் கொண்ட கும்பலை அதிரடியாக கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து சுமார் 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான 18 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.