விபத்தில் சிக்கிய தென் கொரிய விமானம்: 175 பயணிகளின் கதி என்ன...? பதைபதைக்க வைக்கும் காட்சி
சியோல், தென் கொரிய நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள விமான நிலையத்தில் விமானம் தீப்பிடித்ததில் 28 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.முன்னதாக தென் கொரியாவில் 175 பயணிகள் மற்றும் 6 பணியாளர்களுடன் சென்ற விமானம் விபத்தில் சிக்கியது. முவான் விமான நிலையத்தில் தரையிறங்கிய போது விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறாது. பாங்காக்கில் இருந்து தென் கொரியாவின் யோன்ஹாப் நோக்கி சென்ற போது இந்த விபத்து ஏற்றப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.பாங்காக்கில் இருந்து 181 பேருடன் புறப்பட்ட விமானம், தென்மேற்கு கடற்கரை விமான நிலையத்தில் உள்ளூர் நேரப்படி காலை 9:07 மணிக்கு தரையிறங்க முயன்றபோது ஓடுபாதையில் இருந்து விலகி வேலியில் மோதியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.விமானத்தில் இருந்து பயணிகளை அகற்ற மீட்பு அதிகாரிகள் முயற்சித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். யோன்ஹாப் செய்தி நிறுவனம் 28 இறப்புகளை உறுதி செய்துள்ளது. ஆனால் அவசர அலுவலகத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை உடனடியாக உறுதிப்படுத்த முடியவில்லை. மற்ற தென் கொரிய ஊடகங்களும் இதேபோன்ற உயிரிழப்புகளை தெரிவித்துள்ளன.உள்ளூர் தொலைக்காட்சி நிலையங்கள் விமானத்தில் இருந்து அடர்த்தியான கறுப்பு புகையின் வெளியாவதையும், விமானம் தீப்பிடித்து எரிவதைக் காட்டும் காட்சிகளை ஒளிபரப்பின.முன்னதாக அஜர்பைஜான் நாட்டின் தலைநகர் பாகுவில் இருந்து கடந்த 25-ந்தேதி ரஷியாவின் குரோஸ்னி நகருக்கு 67 பேருடன் சென்று கொண்டிருந்த விமானம் கஜகஸ்தான் நாட்டின் அக்தாவ் நகரில் அவசரமாக தரையிறங்கும்போது வெடித்து சிதறியது. இந்த விபத்தில் 38 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 29 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த நிலையில் அடுத்த சில தினங்களிலே இந்த கோர விபத்து நடந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. #BREAKING: Video shows crash of Jeju Air Flight 2216 in South Korea. 181 people on board. At least 28 killed in South Korea plane crash, fate of 151 people still unknown pic.twitter.com/QnmB9PbcDO