பாக்சிங் டே டெஸ்ட்; இந்த காரணத்தினால் தான் டிக்ளேர் செய்யவில்லை - மார்னஸ் லபுஸ்சேன்
மெல்போர்ன்,இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரின் 4-வது போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ள இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் முறையே ஆஸ்திரேலியா 474 ரன்களும், இந்தியா 369 ரன்களும் அடித்தன.இதனையடுத்து 105 ரன்கள் பின்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா 4-வது நாள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 228 ரன்கள் அடித்துள்ளது. லயன் 41 ரன்களுடனும் (54 பந்துகள்), ஸ்காட் போலன்ட் 10 ரன்களுடனும் (65 பந்துகள்) களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலியா இதுவரை 333 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. நாளை கடைசி நாள் ஆட்டம் நடைபெறுகிறது.இந்நிலையில், இந்த ஆட்டத்தில் இன்றைய நாளில் கடைசி கட்டத்தில் ஆஸ்திரேலியா டிக்ளேர் செய்து இந்தியாவை பேட்டிங் செய்ய வைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆஸ்திரேலியா தொடர்ந்து பேட்டிங் செய்து வருகிறது. இந்நிலையில், ஆஸ்திரேலியா ஏன் டிக்ளேர் செய்யவில்லை என்பது குறித்து மார்னஸ் லபுஸ்சேன் தகவல் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் கூறியதாவது, நாங்கள் எங்களுக்கு சரியான ஆட்டத்தை கொண்டு இருந்தோம் என்று நினைக்கிறேன். இன்று நாங்கள் அவர்களுக்கு எதிராக பந்து வீச வருவது மற்றும் அவர்களை அழுத்தத்திற்கு உள்ளாக்குவதற்கான வாய்ப்பில் இருந்தோம். ஆனால் ஆடுகளம் இருந்த நிலைமை மற்றும் இந்திய பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. அவர்கள் எங்களை முதல் 40 ஓவரில் அழுத்தத்திற்கு உள்ளாக்கினர்.இதனால்தான் நாங்கள் இன்று ரன்கள் எடுக்க முடியாமலும், டிக்ளேர் செய்ய முடியாமலும் ஆக்கிவிட்டது. ஒரு நேரத்தில் இந்திய அணிக்கு 250 முதல் 270 ரன்கள் மட்டுமே டார்கெட் இருந்திருக்கும். ஆனால் அந்த நிலைமையில் இருந்து எங்களுடைய கடைசி கட்ட பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடிய தற்பொழுது 333 ரன்கள் முன்னிலை கொண்டு வந்திருக்கிறார்கள். இதற்கான முழு பெருமையும் அவர்களுக்கு சேரும். இவ்வாறு அவர் கூறினார்.