ஈரோட்டில் நடந்த மாநில மூத்தோர் தடகள போட்டி; 800-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
ஈரோடு,ஈரோடு மாவட்டத்தில் உள்ள வ.உ.சி. மைதானத்தில் 39-வது மாநில அளவிலான தடகள சாம்பியன்ஷிப் போட்டி நேற்று தொடங்கியது. இதில் 30 வயதிற்கு மேற்பட்டோருக்கு பல்வேறு பிரிவுகளில், உயரம் தாண்டுதல், குண்டு ஏறிதல், வட்டு ஏறிதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டிகளில் சுமார் 800 பேர் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இதில் அனைத்து பிரிவுகளிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் நபர்கள், ஜனவரி மாதம் மைசூரில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான போட்டிக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.