ஐ.சி.சி. சிறந்த ஒருநாள் வீரர் விருது 2024: பரிந்துரை பட்டியலில் 2 இலங்கை வீரர்கள்

  தினத்தந்தி
ஐ.சி.சி. சிறந்த ஒருநாள் வீரர் விருது 2024: பரிந்துரை பட்டியலில் 2 இலங்கை வீரர்கள்

துபாய், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஒவ்வொரு வருடமும் சிறந்த வீரர், சிறந்த வீராங்கனை, சிறந்த ஒரு நாள் அணி, டி20 அணி, டெஸ்ட் அணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது. அந்த வரிசையில் இந்த வருடமும் விருது வழங்கும் வகையில் பரிந்துரை பட்டியலை வெளியிட்டு வருகிறது.அதன்படி நடப்பாண்டிற்கான 'சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர்' விருதுக்கு தகுதியான வீரரை தேர்வு செய்ய 4 பெயர்களை ஐ.சி.சி. பரிந்துரைத்து வெளியிட்டுள்ளது. அதில் இலங்கை வீரர்களான வனிந்து ஹசரங்கா மற்றும் குசல் மென்டிஸ், ஆப்கானிஸ்தானை சேர்ந்த அஸ்மத்துல்லா உமர்சாய் மற்றும் வெஸ்ட் இண்டீசின் ஷெர்பான் ரூதர்போர்டு ஆகிய 4 பேர் இடம்பெற்றுள்ளனர்.

மூலக்கதை