5வது டெஸ்ட்: சிட்னி சென்றடைந்த இந்திய அணி

  தினத்தந்தி
5வது டெஸ்ட்: சிட்னி சென்றடைந்த இந்திய அணி

சிட்னி, இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரில் விளையாடியது. இதில் நடைபெற்ற முதல் 3 போட்டிகளின் முடிவில் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் இருந்தது.இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 184 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1-2 என்ற கணக்கில் பின்னடைவை சந்தித்துள்ளது.இந்த நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையேயான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் வரும் 3ம் தேதி தொடங்குகிறது. இந்த நிலையில் 5வது டெஸ்ட்போட்டியில் விளையாடுவதற்காக இந்திய அணி தற்போது சிட்னி சென்றடைந்துள்ளது . இன்று மாலை இந்திய அணி வீரர்கள் பயிற்சியை தொடங்க உள்ளனர்.

மூலக்கதை