மகளிர் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை; பேட்டிங் பட்டியலில் சரிவை சந்தித்த மந்தனா

  தினத்தந்தி
மகளிர் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை; பேட்டிங் பட்டியலில் சரிவை சந்தித்த மந்தனா

துபாய், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் பேட்டிங் பட்டியலில் தென் ஆப்பிரிக்காவின் லாரா வோல்வோர்ட் (773 புள்ளி) முதல் இடத்தில் உள்ளார். இலங்கையின் சமாரி அத்தபத்து (733 புள்ளி) ஒரு இடம் ஏற்றம் கண்டு 2ம் இடத்திற்கு வந்துள்ளார். இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா (720 புள்ளி) ஒரு இடம் சரிவை சந்தித்து 3ம் இடத்திற்கு வந்துள்ளார்.இந்த பட்டியலில் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹேலி மேத்யூஸ் (652 புள்ளி) 6 இடம் ஏற்றம் கண்டு 7வது இடத்திற்கு வந்துள்ளார். ஒருநாள் பந்துவீச்சாளர்கள் பட்டியலில் இங்கிலாந்தின் சோபி எக்லெஸ்டோன் (771 புள்ளி) முதல் இடத்திலும், ஆஸ்திரேலியாவின் மேஹன் ஸ்கட் (704 புள்ளி) 2ம் இடத்திலும், ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே கார்ட்னெர் (698 புள்ளி) 3ம் இடத்திலும் உள்ளனர்.இந்தப்பட்டியலில் இந்தியாவின் தீப்தி சர்மா (665 புள்ளி) ஒரு இடம் ஏற்றம் கண்டு 5ம் இடத்திற்கு வந்துள்ளார். இந்தப்பட்டியலிலும் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹேலி மேத்யூஸ் (616 புள்ளி) 2 இடம் ஏற்றம் கண்டு 7வது இடத்திற்கு வந்துள்ளார். ஒருநாள் ஆல்ரவுண்டர்கள் தரவரிசை பட்டியலில் தென் ஆப்பிரிக்காவின் மரிசேன் கேப் (444 புள்ளி) முதல் இடத்திலும், ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே கார்ட்னெர் (407 புள்ளி) 2ம் இடத்திலும், வெஸ்ட் இண்டீஸின் ஹேலி மேத்யூஸ் (401 புள்ளி) 3ம் இடத்திலும் உள்ளனர்.Important gains for India and West Indies performers in the Women's ODI Rankings https://t.co/54T49dKq8I

மூலக்கதை