உடன்பிறப்புகளோடு புத்தாண்டு தொடக்கம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட பதிவு

  தினத்தந்தி
உடன்பிறப்புகளோடு புத்தாண்டு தொடக்கம்: முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட பதிவு

சென்னை,உலகம் முழுவதும் 2025 ஆங்கில புத்தாண்டு இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. ஆங்கில புத்தாண்டை மக்கள் உற்சாகமாக வரவேற்று கொண்டாடி வருகின்றனர். தமிழகம் முழுவதும் கோவில்களிலும், தேவாலயங்களிலிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்த சூழலில் புத்தாண்டையொட்டி அமைச்சர்கள், எம்.பி.க்கள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அதன்படி ஆங்கில புத்தாண்டையொட்டி, முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினை இன்று முகாம் அலுவலகத்தில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு, இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, எஸ். ஜெகத்ரட்சகன், கனிமொழி, கலாநிதி வீராசாமி ஆகியோர் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.இந்நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளத்தில், "உடன்பிறப்புகளோடு புத்தாண்டு தொடக்கம்" என்று அவர் பதிவிட்டுள்ளார். அத்துடன் தொண்டர்கள் மற்றும் அமைச்சர்கள் அவரை சந்தித்த வீடியோவும் அதில் இணைக்கப்பட்டிருந்தது. முன்னதாக தனது மற்றொரு பதிவில், "புதிய ஆண்டு, புதிய நம்பிக்கைகள்! 2025-ம் ஆண்டு புத்தாண்டு உதயமாகும் போது, அன்பு, சமத்துவம் மற்றும் முன்னேற்றத்துடன் 2024 இன் வெற்றிகளைக் கட்டியெழுப்புவோம். அனைவருக்கும் ஒற்றுமை மற்றும் சாத்தியங்கள் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்"என்று அதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.உடன்பிறப்புகளோடு புத்தாண்டு தொடக்கம் #NewYear2025 pic.twitter.com/EGg3fcSUK3

மூலக்கதை