பிக் பாஷ் லீக்: சிக்சருக்கு பறந்த பந்து... தாவி கேட்ச் பிடித்த மேக்ஸ்வெல்.. வீடியோ வைரல்
பிரிஸ்பேன், ஆஸ்திரேலியாவின் உள்ளூர் டி20 தொடரான பிக் பாஷ் லீக் தொடரின் 14-வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 19-வது லீக் ஆட்டத்தில் முன்ரோ தலைமையிலான பிரிஸ்பேன் ஹீட் அணி, ஸ்டோய்னிஸ் தலைமையிலான மெல்போர்ன் ஸ்டார்சை எதிர் கொண்டது. இதில் முதலில் பேட்டிங் செய்த பிரிஸ்பேன் அணி 20 ஓவர்கள் முடிவில் 149 ரன்கள் அடித்தது. இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய மெல்போர்ன் ஸ்டார்ஸ் 18.1 ஓவர்களில் 153 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. முன்னதாக இந்த ஆட்டத்தில் பிரிஸ்பேன் அணி பேட்டிங் செய்தபோது 17-வது ஓவரை டேனியல் லாரன்ஸ் வீசினார். அந்த ஓவரின் முதல் பந்தை எதிர்கொண்ட பிரெஸ்ட்விட்ஜ் அதனை அதிரடியாக அடித்தார். அனைவரும் அதனை சிக்சர் என்று நினைத்தனர். ஆனால் எல்லைக்கோட்டின் அருகே பீல்டிங் செய்த கிளென் மேக்ஸ்வெல் தாவிச்சென்று பந்தை சிக்சரில் இருந்து தடுத்து எல்லைக்கு உள்ளே தட்டிவிட்டு அபாரமாக கேட்ச் செய்தார். இதனை பார்த்த மைதானத்தில் இருந்த ரசிகர்கள் அனைவரும் ஆச்சரியத்தில் உறைந்தனர். மேலும் இந்த கேட்ச் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.GLENN MAXWELL!CATCH OF THE SEASON. #BBL14 pic.twitter.com/3qB9RaxHNb