வணிக வளாகம் மீது விமானம் மோதி விபத்து - 2 பேர் பலி

  தினத்தந்தி
வணிக வளாகம் மீது விமானம் மோதி விபத்து  2 பேர் பலி

வாஷிங்டன்,அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாணத்தில் நேற்று சிறிய ரக விமானம் வானில் பறந்துகொண்டிருந்தது. அந்த விமானத்தில் 20 பேர் பயணித்தனர்.புலர்டன் நகர் வான்பரப்பில் பறந்துகொண்டிருந்தபோது திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம் விபத்துக்குள்ளானது. அப்பகுதியில் உள்ள வணிக வளாகத்தின் மேற்கூரை மீது மோதி விமானம் தீப்பற்றி எரிந்தது.இந்த கோர விபத்தில் விமானத்தில் பயணித்த 2 பேர் உயிரிழந்தனர். மேலும், 18 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூலக்கதை