விஜய் ஹசாரே டிராபி; வருண் சக்கரவர்த்தி அபார பந்துவீச்சு... மிசோரத்தை எளிதில் வீழ்த்திய தமிழகம்

  தினத்தந்தி
விஜய் ஹசாரே டிராபி; வருண் சக்கரவர்த்தி அபார பந்துவீச்சு... மிசோரத்தை எளிதில் வீழ்த்திய தமிழகம்

விஜயநகரம், விஜய் ஹசாரே தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த தொடரில் விஜயநகரத்தில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டம் ஒன்றில் தமிழகம் - மிசோரம் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த மிசோரம் வீரர்கள் தமிழகத்தின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.இதன் காரணமாக மிசோரம் 21.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 71 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. தமிழகம் தரப்பில் அபாரமாக பந்துவீசிய வருண் சக்கரவர்த்தி 9 ரன் மட்டும் கொடுத்து 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். மிசோரம் தரப்பில் அதிகபட்சமாக அக்னி சோப்ரா 23 ரன்கள் எடுத்தார். இதையடுத்து 72 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தமிழகத்தின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெகதீசன் மற்றும் துஷார் ரஹாஜே ஆகியோர் களம் இறங்கினர். இருவரும் அதிரடியாக ஆடி அணியை வெற்றிக்கு அழைத்து சென்றனர். இறுதியில் தமிழகம் 10 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 75 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.தமிழகம் தரப்பில் ஜெகதீசன் 46 ரன்னும், துஷார் ரஹாஜே 27 ரன்னும் எடுத்தனர். தமிழகம் தனது அடுத்த லீக் ஆட்டத்தில் வரும் 5ம் தேதி சத்தீஸ்கரை எதிர்கொள்ள உள்ளது.Tamil Nadu won comfortably against Mizoram in the Vijay Hazare Trophy 2024-25. ️ Up next: Chhattisgarh, on Jan 5.#TNvCAM #VHT #VijayHazareTrophy #TamilNaduCricket #TNCA #TNCricket pic.twitter.com/qZ8Hc8T2FV

மூலக்கதை