புதுச்சேரியில் ரூ.750 பொங்கல் பரிசு - முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு
புதுச்சேரி,பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு என பொங்கல் பொருட்கள் வினியோகிக்கப்பட உள்ளன. இந்த பொங்கல் பொருட்கள் வழங்குவதற்கான டோக்கன் இன்று முதல் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தின் அறிவிப்பினை தொடர்ந்து புதுவையிலும் மக்களுக்கு பொங்கல் பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரித்தது.இந்த நிலையில், புதுச்சேரியில் பொங்கல் பரிசுத்தொகுப்பிற்கு பதிலாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.750 வழங்கப்படும் என்று அம்மாநில முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். இந்த தொகை குடும்ப அட்டைதாரர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட உள்ளது.கடந்த ஆண்டைப்போலவே இந்த ஆண்டும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பணமாகவே பொங்கல் பரிசு வழங்கப்படுகிறது.