பிக் பாஷ் லீக்; பென் டக்கட் அரைசதம்...ரெனிகேட்ஸ் அணியை வீழ்த்திய மெல்போர்ன் ஸ்டார்ஸ்

  தினத்தந்தி
பிக் பாஷ் லீக்; பென் டக்கட் அரைசதம்...ரெனிகேட்ஸ் அணியை வீழ்த்திய மெல்போர்ன் ஸ்டார்ஸ்

மெல்போர்ன்,ஆஸ்திரேலியாவின் உள்ளூர் டி20 தொடரான பிக் பாஷ் லீக் தொடரின் 14-வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் மற்றும் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற மெல்போர்ன் ஸ்டார்ஸ் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டை இழந்து 168 ரன்கள் எடுத்தது. மெல்போர்ன் ரெனிகேட்ஸ் தரப்பில் அதிகபட்சமாக ஜேக்கப் பெத்தேல் 49 ரன்கள் எடுத்தார். மெல்போர்ன் ஸ்டார்ஸ் தரப்பில் ஜோயல் பாரிஸ், சிடில் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். தொடர்ந்து 169 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 19.4 ஓவர்களில் 5 விக்கெட்டை மட்டும் இழந்து 171 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மெல்போர்ன் ஸ்டார்ஸ் தரப்பில் அதிரடியாக ஆடிய பென் டக்கட் 67 ரன்கள் எடுத்தார். மெல்போர்ன் ரெனிகேட்ஸ் குரிந்தர் சந்து 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

மூலக்கதை