மகளிர் கிரிக்கெட்; அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு

  தினத்தந்தி
மகளிர் கிரிக்கெட்; அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு

புதுடெல்லி,அயர்லாந்து மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 10ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரின் ஆட்டங்கள் ராஜ்கோட்டில் நடக்கிறது.இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் ஹர்மன்ப்ரீத் கவுர், ரேனுகா சிங் தாக்கூர் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக இந்த அணிக்கு ஸ்மிருதி மந்தனா கேப்டனாகவும், தீப்தி சர்மா துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.இந்த தொடருக்கான இந்திய அணியில் முன்னணி வீராங்கனையான ஷபாலி வர்மாவுக்கு இடம் அளிக்கப்படவில்லை.இந்திய அணி விவரம்: ஸ்மிருதி மந்தனா (கேப்டன்), தீப்தி சர்மா (துணை கேப்டன்), பிரதிகா ராவல், ஹார்லீன் தியோல், ஜெமிமா ரோட்ரிக்ஸ், உமா செத்ரி (விக்கெட் கீப்பர்), ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), தேஜல் ஹசாப்னிஸ், ரக்வி பிஸ்ட், மின்னு மணி, பிரியா மிஷ்ரா, தனுஷா கன்வர், டைட்டஸ் சாது, சைமா தாக்கூர், சயாலி சத்கரே. #TeamIndia (Senior Women) squad for series against Ireland Women announced.: Harmanpreet Kaur and Renuka Singh Thakur have been rested for the series.Details #INDvIRE | @IDFCFIRSTBank

மூலக்கதை