நிலக்கரி சுரங்கத்துக்குள் திடீரென புகுந்த தண்ணீர்... 15 தொழிலாளர்களின் கதி என்ன?

  தினத்தந்தி
நிலக்கரி சுரங்கத்துக்குள் திடீரென புகுந்த தண்ணீர்... 15 தொழிலாளர்களின் கதி என்ன?

கவுகாத்தி, அசாமின் திமா ஹசாவோ மாவட்டத்தின் உம்ராங்சோ பகுதியில் நிலக்கரி சுரங்கம் ஒன்று உள்ளது. இங்கு நேற்று வழக்கம்போல பணிகள் நடந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென சுரங்கத்துக்குள் தண்ணீர் புகுந்ததால் பணியில் இருந்த தொழிலாளர்கள் வெளியேற முடியாமல் சிக்கிக்கொண்டனர். சம்பவத்தின்போது சுரங்கத்துக்குள் எத்தனை தொழிலாளர்கள் இருந்தனர்? என தெரியவில்லை. அதேநேரம் சுமார் 15 பேர் இருந்ததாக சக தொழிலாளர்கள் தெரிவித்தனர். எனினும் மாவட்ட நிர்வாகம் இதை உறுதிப்படுத்தவில்லை. அவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

மூலக்கதை