ஜம்மு காஷ்மீர்: துப்பாக்கியால் சுட்டு பாதுகாப்புப்படை வீரர் தற்கொலை

  தினத்தந்தி
ஜம்மு காஷ்மீர்: துப்பாக்கியால் சுட்டு பாதுகாப்புப்படை வீரர் தற்கொலை

ஸ்ரீநகர்,பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் ராஜ்நாத் பிரசாத் (55). இவர் மத்திய பாதுகாப்பு படையில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தின் கத்ராவில் உள்ள மாதா வைஷ்ணவி தேவி கோவில் பகுதியில் இன்று பாதுகாப்பு பணியில் இருந்த ராஜ்நாத் தனது துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டு விரைந்து வந்த சக வீரர்கள், அவர் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிரிழந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பாதுகாப்புப்படை வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீஸ் அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூலக்கதை