திரவுபதி முர்முவுடன் முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சந்திப்பு
புதுடெல்லி,இந்தியாவின் 14-வது ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த், 2017-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை பதவி வகித்தார். தற்போது 79 வயதாகும் ராம்நாத் கோவிந்த், உத்தர பிரதேச மாநிலத்தில் இருந்து இந்தியாவின் ஜனாதிபதியாக பதவியேற்ற முதல் நபர் என்ற பெருமையை பெற்றவர் ஆவார். இந்நிலையில், ஜனாதிபதி திரவுபதி முர்முவை முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு குறித்து ஜனாதிபதி மாளிகையின் அதிகாரப்பூர்வ 'எக்ஸ்' தள பக்கத்தில் புகைப்படத்துடன் கூடிய பதிவு வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. Shri Ram Nath Kovind, former President of India called on President Droupadi Murmu at Rashtrapati Bhavan. pic.twitter.com/i1JcwHAMn7