திருப்பரங்குன்றம் மலை தர்காவில் தொழுகை நடத்த அனுமதி மறுப்பா? - தமிழக அரசு விளக்கம்

  தினத்தந்தி
திருப்பரங்குன்றம் மலை தர்காவில் தொழுகை நடத்த அனுமதி மறுப்பா?  தமிழக அரசு விளக்கம்

சென்னை,மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள தர்காவில் முஸ்லிம்கள் தொழுகை நடத்த போலீஸ் அனுமதி மறுத்ததாக செய்தி வெளியாகியுள்ளது. இதற்கு தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது. அதில், "இது முற்றிலும் பொய்யான செய்தி. திருப்பரங்குன்றம் சுல்தான் சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்காவில் ஆடுகளை பலிகொடுப்பது தொடர்பாக நீதிமன்றத்தின் மூலமாக தீர்வு பெற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்கள் தர்காவில் வழிபாடு செய்ய போலீஸ் மற்றும் வருவாய்த்துறையினர் தடை விதித்துள்ளதாக பொய் பிரசாரம் செய்து வருகின்றனர். அங்கு முஸ்லிம்கள் வழக்கம்போல் வழிபாடுகளை மேற்கொள்ள எந்தவித தடைகளும் விதிக்கப்படவில்லை என்று திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியர் விளக்கம் அளித்துள்ளார்" என்று கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை