இந்திய அணியில் கில்லுக்கு பதிலாக இவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கலாம் - ஸ்ரீகாந்த்

  தினத்தந்தி
இந்திய அணியில் கில்லுக்கு பதிலாக இவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கலாம்  ஸ்ரீகாந்த்

சென்னை,இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடியது. இந்த தொடரில் இந்திய அணி 1-3 என்ற கணக்கில் தோல்வி கண்டது. இந்திய அணி தோல்வி அடைய ரோகித், விராட் ஆகியோர் சிறப்பாக செயல்படாததே முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. அதேபோல இளம் வீரரான சுப்மன் கில்லும் சிறப்பாக செயல்படவில்லை.இந்நிலையில் சுப்மன் கில் குறைந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தினாலும் அதிகமாக கொண்டாடப்படும் ஓவர்ரேட்டட் பிளேயர் என இந்திய முன்னாள் வீரரான ஸ்ரீகாந்த் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, சுப்மன் கில் ஓவர்ரேட்டேட் பிளேயர் என்பதை நான் எப்போதும் சொல்லி வருகிறேன். ஆனால் யாரும் என்னை கேட்பதில்லை. அவர் அதிகமாக கொண்டாடப்படும் ஓவர்ரேட்டட் கிரிக்கெட்டர். சுப்மன் கில் இவ்வளவு நீண்ட வாய்ப்புகள் பெறும் போது சூர்யகுமார் யாதவ் போன்ற வீரர்களுக்கு ஏன் டெஸ்ட் கிரிக்கெட்டில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்று சிலர் ஆச்சரியப்படலாம். டெஸ்ட் கிரிக்கெட்டை சூர்யகுமார் நன்றாக துவங்கவில்லை. இருப்பினும் அவரிடம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அசத்துவதற்கு தேவையான டெக்னிக் மற்றும் திறன் இருக்கிறது. ஆனால், தேர்வாளர்கள் மற்றும் அணி நிர்வாகம் அவரை டி20 வீரராக தற்போது முத்திரை குத்தியுள்ளார்கள். நீங்கள் புத்துணர்ச்சியான வீரர்களை பார்க்க வேண்டும். அது போன்ற சூழ்நிலையில் நீங்கள் ருதுராஜை பார்க்கலாம். உள்ளூர் கிரிக்கெட்டில் நன்றாக விளையாடியும் அவரை நீங்கள் ஆஸ்திரேலியாவில் தேர்ந்தெடுக்கவில்லை. அதே போல சாய் சுதர்சன் ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் சதத்தை அடித்தார். ஆனால் சுதர்சனை தேர்ந்தெடுக்காத நீங்கள் கில் போன்றவரை தேர்ந்தெடுத்தீர்கள். 9 வாய்ப்புகளில் தோல்வியடைந்து 10வது வாய்ப்பில் அசத்துவதால் மட்டுமே கில்லுக்கு இப்போதும் வாய்ப்பு கிடைக்கிறது. இந்திய மைதானங்களில் அவரைப் போல் யார் வேண்டுமானாலும் ரன்கள் அடிக்கலாம். ஆனால் சொந்த மண்ணுக்கு வெளியே ரன்கள் அடிப்பது சவாலாகும். அங்கே தான் கே.எல் ராகுல் போன்ற வீரர்கள் அசத்துவதால் வாய்ப்பு பெறுகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை