புதிய வகை வைரஸ் எதிரொலி: நீலகிரியில் மாஸ்க் கட்டாயம்

  தினத்தந்தி
புதிய வகை வைரஸ் எதிரொலி: நீலகிரியில் மாஸ்க் கட்டாயம்

நீலகிரி,கர்நாடக மாநிலம் பெங்களூரில் ஹெச்எம்பி வைரஸ் பரவியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அந்த மாநிலம் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பெங்களூருவில் மாஸ்க் அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், நீலகிரி மாவட்டம் கர்நாடகம் மற்றும் கேரளாவை ஒட்டி உள்ளதாலும் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வருவதாலும், நீலகிரி மாவட்டத்தில் சுகாதாரத் துறை பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்துள்ளது.இதுகுறித்து நீலகிரி மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா செய்தியாளர்களிடம் கூறியதாவது: பெங்களூரில் 2 பேருக்கு (ஹெச்எம்பிவி) புதிய வகை வைரஸ் பரவி இருக்கிறது. இதனால், அந்த வைரஸ் பரவாமல் இருக்க என்னென்ன செய்ய வேண்டும் எதை செய்யக்கூடாது என்பது குறித்து ஒரு அறிக்கை சுகாதாரத் துறை தயாரித்து வருகிறது. அதேபோல் நீலகிரி மாவட்ட எல்லையில் உள்ள அனைத்து சோதனைச் சாவடிகளிலும் சுகாதாரத் துறையினர் கண்காணித்து வருவார்கள்.நீலகிரி மாவட்டத்தில் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும். எச்எம்பிவி தொற்று மட்டுமின்றி வழக்கமான காய்ச்சல் காலங்களிலும் நீலகிரி மாவட்டத்தில் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் முகக்கவசம் அணிவது நல்லது. மாஸ்க் தவிர பிற கட்டுப்பாடுகள் தொற்று பரவலை பொறுத்து அறிவிக்கப்படும்புதிய வகை வைரஸ் (HMPV)நோய் தொற்று குறித்து பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை. நோய் குறித்து சந்தேகம் இருப்பின் 9342330053 என்ற இலவச உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றார்.

மூலக்கதை