10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இலங்கை செல்கிறார் பிரதமர் மோடி
கொழும்பு,பிரதமர் மோடி இந்த ஆண்டிற்குள் இலங்கைக்கு வருகை தருவார் என்று இலங்கையில் உள்ள இந்திய உயர் ஆணையரகம் தெரிவித்துள்ளது. இது குறித்த தேதிகள் இன்னும் இருதரப்பில் இருந்தும் முடிவாகவில்லை. இது குறித்து கொழும்பிவில் உள்ள இந்திய உயர் ஆணையர் சந்தோஷ் ஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது:- பிரதமர் மோடி இலங்கை பயணத்துக்கான தேதி குறித்து ஆய்வு செய்து வருகிறோம் என்றார்.கடந்த மாதம் இரண்டு நாள் பயணமாக இந்தியாவிற்கு வருகை தந்த இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக, பிரதமர் மோடியை இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். பிரதமர் மோடி முதல் முறையாக பிரதமராக பதவியேற்ற பின்னர் 2015 மற்றும் 2017-ம் ஆண்டுகளில் 2 இருமுறை இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார்.அதன்பின்னர் 10 ஆண்டுகள் கழித்து மீண்டும் இலங்கை செல்ல இருக்கிறார் பிரதமர் மோடி. அநுர குமார திசநாயக விரைவில் சீனாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். அந்தப் பயணத்திற்கான தேதிகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை என்று இலங்கை அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.